மறைந்த மூத்த ஒலி - ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரீ ஞாபகார்த்த விருது

 என்னுடைய சமூக ஊடக, தொழில்நுட்ப, இதழியல் பணிகளைப் பாராட்டி வியூகம் ஊடக வலைமைப்பினால் மறைந்த மூத்த ஒலி - ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரீ ஞாபகார்த்த விருது, வியூகம் ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனூஸ் சம்சுதீன் அவர்களினால் இன்று வழங்கப்பட்டது.

வியூகம் TV ஏற்பாட்டில் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட "தியாகத் தென்றல்" இஸ்லாமிய கலை கலாசார நிகழ்ச்சி கடந்த 30.06.2023 (வெள்ளிக்கிழமை) சாய்ந்தமருது கடற்கரை வீதி மருதூர் சதுக்கத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இவ்விருது வழங்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என மன வருத்தம் அடைகிறேன்.
எனது ஊடக பயணத்திற்கு அடித்தளம் இட்ட ஊடகத்தினால் இவ் விருதை பெறுவதில் பெருமிதம் கொள்கின்றேன்.




Post a Comment

0 Comments