About


இவர் மீராசாஹிப் ஜெமீல் மற்றும் பாத்தும்மா தம்பதியர்களின் மூத்த புதல்வராக சாய்தமருது மண்ணில் பிறந்தார்.

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலத்திலும் உயர்தரத்தை கல்முனை ஸாஹிறாக் கல்லூரிலும் பயின்றார். பின்னர் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (NVQ தரம் -5) தொழிற் பயிற்சி நிலையத்தில் பூர்த்தி செய்தார்.

பாஸித் பாடசாலை காலத்திலிருந்தே டிஜிடல் மீடியாவிலும் அதீத ஆர்வம் கொண்டவர். பாடசாலைக் கல்வியின் பின்னர் தனது கவனத்தை முழுமையாக டிஜிட்டல் மீடியாவில் செலுத்தினார். அதனூடாக தேர்ச்சி பெற்ற பல நிறுவனங்களில் வடிவமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றார். தனது துறையில் சுமார் 8 வருடங்கள் பணியாற்றிய அனுபம் கொண்டவர்.

இணையதள வடிவமைப்பாளராக செயற்பட்ட இவர் இலங்கையில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கும் இணையதள வடிவமைப்பாளராக செயற்பட்டுள்ளார்.

இவ்வாறு தனது திறமையை வளர்த்து வந்த பாஸித் தனக்கென்று ஒரு நாமத்தை உருவாக்கி அதனூடாக இணையதள வடிவமைப்புத் துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி அதில் நிலைத்திருக்க விரும்பினார். அதுதான் ஸ்கை கிராபிக்ஸ் ஆகும். ஸ்கை கிராபிக்ஸ் எனும் பெயரில் இத் துறையில் தனக்கென முதல் சொந்த அடையாளத்தை உருவாக்கினார்.

ஸ்கை கிராபிக்ஸ் என்ற நாமத்துடன் தனது வடிவமைப்பாளர் தொழிலை நடாத்திச் சென்ற வேளை இவரின் கிராபிக்ஸ் எடிட்டிங் திறமையைக் கண்டு ஆலையடிவேம்பு சிவனருள் தொழிற் பயிற்சி நிலையத்தில் கம்பியூட்டர் கிராபிஸ் டிசைனின் பயிற்சி போதனசிரியராக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். இப் பயிற்சி நிலையம் தாய் தந்தை இளந்த பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் என இணைக்கப்பட்டிருந்தனர்.. இதில் ஜெ.எம்.பாஸித் ஒரு வருடம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவர் ஒரு இணையதள வடிவமைப்பாளர் என்பதையும் தாண்டி இவர் ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்கின்றார். அத்துடன் இவர் சாய்ந்தமருது பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவரும் மற்றும் முன்னாள் இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினருமாவார். தேசிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் மாநாடுகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார்.

அதன் விளைவாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக சாய்ந்தமருது பிரதேசத்தில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் (07.08.2019) அன்று கிடைப்பெற்றது.

இவர் இளைஞர் ஆளுமை தலைமைத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பிரித்தானிய நாட்டின் 'எடின்பார்க்' பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச 'வெண்கல' விருது 2017யில் இவருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு கிராபிக்ஸ் துறையிலே நகர்ந்த இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக ஊடகத் துறையில் இவரது பயணம் ஆரம்பித்தது. அதன் முதற்கட்டமாக வியூகம் முகநூல் ஊடகத்தில் பணிப்புரிந்தார். இதுவே இவரது ஊடகப் பயணத்திற்கு முதல் வித்திட்டது. வியூகம் ஊடகத்தின் அனுசரணையுடன் இவர் 2017 ஆம் ஆண்டு கட்டார் நாட்டுக்கு 20நாள் ஊடக பயணத்தை மேற்கொண்டார்.

பின்னர் தனது வேலை வாய்ப்பிற்காக 2019 ஆம் ஆண்டு கட்டார் நாட்டை நோக்கி பயணமானார். இவருக்கு ஊடகத் துறையில் ஏற்பட்ட ஆர்வம் கட்டார் நாட்டிலும் தனது ஊடகப் பயணத்தைத் தொடரத் தூண்டியது. ஆனால் இம்முறை பாஸித் தனது சொந்த சமூக வலைதள ஊடகத்தை 2020 - கட்டார் நாட்டில் ஸ்கை தமிழ் எனும் பெயரில் உருவாக்கினார்.

இவ் ஸ்கைத் தமிழ் எனும் சமூகவலைதளமே தற்போது பிரபல்யமாக் காணப்படுகின்ற பெண் ஆளுமைகளை அடிப்படையாகக் கொண்ட துணிந்தெழு எனும் நேர்காணல் நிகழ்ச்சியையும், துணிந்தெழு சஞ்சிகையையும் வெளியிட்டு வருகிறது. இத் துணிந்தெழு சஞ்சிகையின் மூலம் பல இளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதோடு அவர்களுக்கு எழுத்தாளர் என்ற அடையாளத்தையும் இச் சமூகத்திற்கு வழங்குகிறது..

துணிந்தெழு சஞ்சிகை பிரசுரிக்க ஆரம்பித்து சிறிது காலத்திலேயே பிரபல்யம் அடைந்ததால் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் 'துணிந்தெழு' சஞ்சிகை தொடர்பாக தனது தூதுவராலயத்தில் பாஸித் மற்றும் சஞ்சிகை குழுவினரை அழைத்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

கட்டார் நாட்டில் வேலை செய்துகொண்டு ஸ்கை தமிழ் எனும் ஊடகத்தின் மூலம் துணிந்தெழு சஞ்சிகை மற்றும் நேர்காணல் நிகழ்ச்சியின் மூலமும் சாதித்துக் கொண்டிருக்கும் பெண் ஆளுமை படைத்தவர்களை சிறப்பாக தெரிவு செய்து அவர்களை பற்றிய விளக்கமான கட்டுரைகளை ஸ்கை தமிழ் பணிப்பாளர் மற்றும் இதழாசிரியர் ஜெ.எம்.பாஸித் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

Post a Comment

0 Comments