கத்தார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் 5 பேர் கொண்ட கால்பந்து போட்டி
......
கத்தார் வாழ் இலங்கையர்களுக்கிடையில் முதன் முதலாக அணிக்கு 5 பேர் கொண்ட FUTSAL PENALTY SHOOTOUT போட்டி தொடர், கத்தார் வாழ் புத்தளம் அமைப்பினால் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கத்தார் அபு ஹமூரில் உள்ள கேம்பிரிட்ஜ் பாடசாலை விளையாட்டு அரங்கில் இப்போட்டி மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை இடம் பெற்றது.
இதில் FUTSAL PENALTY SHOOTOUT போட்டி தொடர் மற்றும் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதன் போது ரஸ்லான் ஆகிப் போட்டிகளை தொகுத்து வழங்கினார், கத்தார் வாழ் புத்தளம் அமைப்பின் தலைவர் சஜித் ஜிப்ரி, போட்டியின் ஒழுங்கு விதிகள் ஒருங்கிணைப்பாளர் ஜஹாங்கீர் ரஃபீக் மற்றும் தஸ்தீக் நளீர், மொஹமட் அஸ்லீயுடன் இணைந்து மொஹமட் ஹம்தியாஸும் போட்டி நடத்துனர்களாக செயற்பட்டனர்.
இந்நிகழ்வில் ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளர் ஜே. எம். பாஸித், ஸ்கை தமிழ் ஊடகத்தின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி மற்றும் CDF அமைப்பின் தலைவர் மற்றும் நிகழ்வு குழு தலைவர் புர்ஹான் மற்றும் PAQ செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட கல்பிட்டிய FC அணியினருக்கும் Haaji 7S அணியினருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் Haaji 7S அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர். வெற்றிப்பெற்ற அணிக்கு கத்தார் வாழ் புத்தளம் அமைப்பின் தலைவர் சஜித் ஜிப்ரி அவர்கள் வெற்றிக்கிணத்தை வழங்கிவைத்தார்.
அத்துடன் இந்த போட்டிக்கு ஊடக அனுசரனை ஸ்கை தமிழ் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Photogrphy by : Hubaib Muzammil



0 Comments