இலங்கை கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் கத்தார் மண்ணில் கவியரங்கு







CWF கத்தார் அனுசரணையில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் கத்தார் முத்தமிழ் மன்றம் ஆகியன கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் 'கத்தார் மண்ணில் கவியரங்கு' நேற்று வெள்ளிக்கிழமை (04 நவம்பர் 2022) 3.30மணிக்கு மதீனா கலிஃபா தெற்கு CWF அலுவலகத்தில் இடம்பெற்றது.
............
நேற்று நடைபெற்ற கவியரங்கம் நிகழ்வானது உண்மையில் மனதுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை அளித்திருந்தது.
பல மூத்த எழுத்தாளர்களின் சந்திப்புகள், அறிமுகமற்ற எழுத்தாளுமைகளின் அறிமுகங்கள், அவர்களுடனான உரையாடல், அனுபவங்கள் புகைப்படங்கள் என்று அனைத்து விடயங்களுமே அற்புதமான தருணமாக மாறியது.
இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மனதாரப் பிராத்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

Post a Comment

0 Comments