வெளிநாட்டில் பணி செய்யும் தமிழர்களின் வலிகளைச் சொல்லும் கனவுல வாழுறேனே தனியிசைப்பாடல் வெளியிட்டு விழா

 ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில்

வெளிநாட்டில் பணி செய்யும் தமிழர்களின் வலிகளைச் சொல்லும் கனவுல வாழுறேனே தனியிசைப்பாடல் வெளியிட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(03) மாலை 05.30 மணிக்கு கத்தார் வொண்டர் பேலஸ் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 'கனவுல வாழுறேனே' பாடலின் ஆசிரியரும், தயாரிப்பாளருமான த. சண்முக பாண்டியனின் பாடலை வெளியீட்டார்.
பாடலுக்காக பணியாற்றிய பாடல் இயக்குநர் செபாஸ்டியன், இசையமைப்பாளர் மோகன் ராம், நடிகை இவள் நந்தினி, நடிகர் அரவிந்த் ஆகியோர் காணொலி மூலம் நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.
ஸ்கை தமிழ் பணிப்பளார் ஜே.எம்.பாஸித் தலைமை தாங்கி நடத்தினார்.
இந்த நிகழ்வின் வரவேற்புரை ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி நிகழ்த்தி இருந்தர்.
'கனவுல வாழுறேனே' பாடலை விஜய் டிவி சுப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் இந்த பாடலை பாடியுள்ளார்.
இந்நிகழ்வில் 'கனவுல வாழுறேனே' பாடலை வெளியிட்ட பாடலாசிரியர், தயாரிப்பாளர் T. சண்முக பாண்டியன் அவர்களை ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பளார் ஜே.எம்.பாஸித் மற்றும் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி ஆகியோர் கௌரத்தனர்.











Post a Comment

0 Comments