கத்தார் முத்தமிழ் மன்றத்தின் நிர்வாக குழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்






தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கத்தார் முத்தமிழ் மன்றம் மற்றும் கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் இணைந்து நடத்திய கவியரங்கம், கிராமிய கலை, சிறப்பு பட்டிமன்றம் மற்றும் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (13) மாலை 3:30 மணிக்கு மெர்குரி கிராண்ட் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.

நிகழ்வில் ஆரம்பத்தில் செல்வி. சரண்யா திரவியம் பரதநாட்டியம் ஆடினார். அத்துடன் வீட்டில் பொங்கல் வைப்பதில் வல்லவர் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. குறித்த பட்டிமன்றத்தில் ஆண்களே என்ற அணி வழக்கறிஞர் சிந்து தமிழ் அவர்களின் தலைமையில் திருமதி ஷோபா ராஜ், திரு சதீஸ்வரன் ஆகியோரும் பெண்களே என்ற அணி திருமதி. ரெஜினா கோபால்சாமி தலைமையில் திருமதி. வசந்தி நகுலன், திரு.அப்துல் ஹாழிர் ஆகியோரும் பங்குபற்றியதுடன், நடுவராக திரு விஜய் ஆனந்த் திகழ்ந்தார்.
மேலும் கவியரங்கத்தில் போகட்டும் துயரங்கள், போகியோடு! எனும் தலைப்பில் விஜயலஷ்மி, பொங்கல் வை புதுமை செய்! எனும் தலைப்பில் S. சிவசங்கர் பொங்கட்டும் அறச்சீற்றம் எனும் தலைப்பில் மனோ கௌதம், இனிவரும் காலம், இன்பம் பொங்கட்டும்! எனும் தலைப்பில் சிக்கந்தர் ஆகிய 4 கவிஞர்கள் கவி பாடினார்கள். அத்துடன் திருமதி. கிருஷ்ணவேணி மற்றும் அவரது குழுவினர் வில்லுப்பாட்டை இசைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் கத்தார் மண்ணில் சிறப்பாக ஊடகப்பணியை மெற்கொண்டு வருகின்ற ஸ்கை தமிழ் பணிப்பாளர் அவர்களுக்கு பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.
குறித்த நிகழ்வானது தமிழர் மரபுகள், பாரம்பரிய பரதநாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, பறை இசை மற்றும் சிலம்பத்தோடு அனைத்தையும் அழகாக ஒருங்கிணைத்து தமிழையும், தமிழரின் அடையாளத்தையும் கத்தாரில் பறைசாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments