கத்தார் மண்ணில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினூடாக விமர்சையாக நடாத்தப்பட்ட கவியரங்கு மற்றும் நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்ட மூத்த எழுத்தாளர்களுக்கு மத்தியில் fகத்தாருக்கு சுற்றுப்பயணம் மெற்கொண்ட நாவலாசிரியர் ஏ.சீ ஜரீனா முஸ்தபா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இதுவரை 7 நாவல்களை எழுதியுள்ளார். மேலும் 'இது ஒரு ராட்சசியின் கதை' நாவலுக்காக இவர் சர்வதேச விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 85-87களில் மதூகரம் வெண்ணிலா போன்ற சஞ்சிகைகளில் இணை ஆசிரியராக செயற்பட்டவராவார். இவர் இலக்கியத் துறையில் சிறுகதை,கட்டுரை பாடல்,கவிதை,நாவல் துணுக்குகள் என்று பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டவர்.
இவ்வாறு பல்வேறுபட்ட திறமைகளைக் கொண்ட எழுத்தாளர் ஜரினா முஸ்தபா அவர்கள் கத்தாரில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டமை மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அத்தோடு அவர் தனது நூல்களான பொக்கிஷம், சமூகமே பதில் சொல், அனுபவமே பேசு போன்ற மூன்று நூல்களை வழங்கியிருந்தார். இதயப்பூர்வமான நன்றிகள்.

0 Comments