லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 180 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தின் அதிபர் வை.எல்.ஏ.வஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் எம்.ஐ.இப்றாகீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை மாணவர்களிடம் வழங்கி வைத்தார்.
இதன்போது கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்ப கல்விப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் வை.எல்.கே.தாஸீம், லெமென் ஹாவெஸ்ட் என்ரபிறசஸ் நிறுவனத்தின கணக்காளர் ஜே.எம்..பாஸித், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




0 Comments