முப்பெரும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 




தமிழா விருது-2018

சென்ற-2018.04.28ல் சம்மாந்துைற அப்துல் மஜுட் மண்டபத்தில் “பிரெஸ்தம்" நிறுவனத்தின் அனுசரனையுடன் தமிழா ஊடக வலையமைப்பின் முப்பெரும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு பிரதம அதிதி சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்கள் குறித்த நேரத்திற்கு கலந்து சிரப்பித்தமைக்கு எமது ஊடகவலையமைப்பு நண்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்நிகழ்வினை தமிழா இணையத்தளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் தலைமை தாங்கி நடாத்தினார்.

சிறப்பு விருந்தினராகவும் மக்கள் விருது பெருபவருமான கல்முனை பிராந்திய மலேரியா மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாத்,

இந்நிகழ்வின் கௌரவ அதிதி சம்மாந்துறை நீர்ப்பாசன காரியாலய பணிப்பாளர் பொறியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ், மற்றறும் அதிதிகளான கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட், வீயூகம் முகநூல் ரீ.வீயின் பணிப்பாளர் எஸ்.ஜனுஸ், தமிழா இணையத்தளத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.எம்.பாஸித், டி.எம்.கே.நிறுவனத்தின் தலைவர் எஸ்.கலீல், தென்கிழக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி எஸ்.சலீம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மக்கள் விருது, கல்விச் சுடர் விருது, சமூக சேவைகள் விருது, விவசாய ஊக்குவிப்பு விருது போன்ற விருதுகள் சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 40பேர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments