பாஸித்துக்காய் இவள் வரிகள்...



சாய்ந்த மருதில் பிறந்த ஓர் சாம்பியன் தான்  பாஸித்.....


இப்போது கட்டாரையே கலக்கும் ஓர் கலைஞன் தான் பாஸித் ......


துணிந்தெழ துடிக்கும் பல எழுத்தாளர்களை துணிந்தெழு எனும் சஞ்சிகை மூலம் படம் பிடித்துக் காட்டும் ஓர் படைப்பாளிதான் பாஸித் .....


ஒழிந்திருக்கும் பெண் ஆளுமைகளை துணிந்தெழு எனும் நேர்காணல் மூலம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஓர் உண்ணத மனிதன் தான் பாஸித் .....


இளம் எழுத்தாளர்களுக்கு

களம் கொடுக்கும் ஓர் கலை மகன் தான் பாஸித் .......


வியூகத்தின் மூலம் ஊடகத்துறையில் கால் பதித்து ...


ஸ்கை கிராபிக்ஸ் எனும் ஒரு நாமத்தை தனக்கென உருவாக்கி....


தன் விடா முயற்சியால் துணிந்தெழு மூலம் விஷ்பரூபம் எடுத்து....


ஆசியாவின் மிகச்சிறந்த நூறு சாதனையாளர்கள் எனும் சர்வதேச உயர் விருதினைப் பெற பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள

ஒரு இளம் சாதனையாளர் தான் பாஸித்..... 


நீர் இலங்கையைச் சார்ந்தவன் என்பதில் இலங்கையைச்  சார்ந்த இவளுக்கு அத்துனை இன்பங்கள் ...


இவளுக்கு மட்டுமல்ல இலங்கை நாடு முழுவதும் பெருமிதம் கொளகிறது உன் பெறுமைதனை சொல்லி கொள்வதில்...


எண்ணிலடங்கா சாதனைகளும்,கை தட்டல்களும்

மட்டிட முடியா வெற்றிகளும், வாழ்த்துக்களும் உனைச் சார்ந்திட இன்னவள் வாழ்த்துக்கள்.


-அரூஸா ஜெவாஹிர் ✍️

அநுராதபுரம் - கெகிராவை

Post a Comment

0 Comments