அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடைவிலகிய, கல்வியை தொடரமுடியாமல் வேலைக்காக காத்திருக்கும் பெண்களை கொண்டு அவர்களின் வருவாயை ஈட்டக்கூடிய செயற்திட்டத்தை wusc நிறுவனத்தின் உதவியுடன் கம்பியூட்டர் கிராபிக்ஸ் டிசைன் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டு நான் போதனாசிரியராக கடைமை புரிந்த காலத்தில் என்னுடைய முயற்சியில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட ஆலையடிவேம்பு கல்வி நிலையமாக பிரதேசத்தில் முதல் முறையாக சிவனருள் பயிற்சி நிலையம் பதிவுசெய்யப்பட்டது.
இதற்கு உதவியாக இருந்த இந் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய குழுத் தலைவர் ஜே. கேஸ்வரன் அவர்களுக்கும், இந் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திரு ஜே. சு. சகாயம் அவர்களுக்கும், கலாநிதி அனுஷியா சேனாதிராஜா மற்றும் நிலையத்தின் போதனாசிரியர் திருமதி. நியோமீ அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் தற்போது இந்நிறுவனம் செயற்பாட்டில் இல்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது.
WUSC நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் உறுப்பினராக பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ECICT தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்விலும் பல வாய்ப்புக்களை அளித்ததுடன், முன்னேற்றப் பாதைக்கான வழிகளை வகுத்து தந்த தலை சிறந்த முன்னேற்றகர நிறுவனமே WUSC நிறுவனமாகும்.
0 Comments