பேட்மின்டன் கிண்ணம்-2021 கத்தார் பேட்மின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பிரண்ட்ஸ் பேட்மின்டன் கழகம் நடாத்திய எவர்கிரீன் பேட்மின்டன் கிண்ணம்-2021 கத்தார் பேட்மின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று(வெள்ளி) 26.02.2021 நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக எவர்கிரீன் நிறுவனத்தின் பணிப்பளார் எஸ்.எம். நௌபர் மற்றும் ஊழியர்கள், கௌரவ அதிதியாகவும்,பிரண்ட்ஸ் பேட்மிண்டன் கழத்தின் உறுப்பினர்கள், சிறப்பு அதிதியாக ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பளார் ஜெ.எம்.பாஸித் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிக்கு கிண்ணம் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்தனர்.

இப் போட்டியில் கத்தார் வாழ் இந்தியர்கள்; 16 பிரிவுகளாக (ஆண், பெண்) நடாத்தப்பட்டது. இதில் பங்குபற்றிய அனைவரும் சிறப்பாக தங்களது திறைமைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள்.


வெளி வந்த செய்தி தினகரன் பிரதம ஆசிரியர் மதிப்புக்குரிய செந்தில் வேலவர் அவர்களுக்கும்
என். நஜ்முல் ஹுசைன் சேர் அவர்களுக்கும் நன்றி

Post a Comment

0 Comments